டெல்லி ஆனந்த் விஹார் பகுதியை சேர்ந்தவர் சுசில் கௌஷிக். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர்  இந்நிலையில் சுஷில் கவுசிக் அப்பகுதியில் நடந்த ராம்லீலா நிகழ்ச்சியில் ராமர் கதாபாத்திரம் ஏற்று நடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மேடையில் நடித்துக் கொண்டிருந்தவர் நகர்ந்து சென்று விட்டார். ஆனால் அவரது உடல்நிலை மோசமாகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக சுசில் கௌசிக் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.