
தேனி மாவட்டத்திலுள்ள பள்ளி நகரத்தில் சரவணன் என்பவர் ரசித்து வருகிறார் இவர் ஹோட்டல் நடத்தி வருகிறார் கடந்த சனிக்கிழமை சரவணன் இன் ஹோட்டலுக்கு வந்த இரண்டு பேர் பரோட்டா வாங்கி சாப்பிட்டனர் அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் போது பரோட்டாவில் முடி இருப்பதாக கூறி சரவணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாப்பாட்டில் இப்படித்தான் முடி இருக்குமா?
பூச்சி, பல்லி போன்ற எது விழுந்தாலும் இப்படித்தான் பதில் சொல்லுவீங்களா என கேள்வி கேட்டுள்ளனர். மேலும் இது குறித்த வீடியோ ஆதாரங்களை உணவு பாதுகாப்பு துறைக்கு அனுப்பி உங்கள் மீது புகார் கொடுப்போம். மேலும் ஹோட்டலுக்கு சீல் வைக்காமல் விடமாட்டோம் என மிரட்டி உள்ளனர். ஒரு வழியாக சரவணன் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.
அவர்கள் சென்ற பிறகு சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. சாப்பிட வந்த இரண்டு பேரில் ஒருவர் தனது மார்பில் இருந்த முடியை கையால் இழுத்து அதனை பரோட்டாவில் போட்டது கேமராவில் பதிவாகி இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சரவணன் தேனி மாவட்ட உணவாக உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன் முருகனுடன் இணைந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று சிசிடிவி காட்சியுடன் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த நபர் அல்லி நகரத்தைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரித்த போது கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஹோட்டலுக்கு சென்று சரவணனிடம் ஓசியாக நித்தியானந்தம் குழம்பு கேட்டுள்ளார். சரவணன் அதனை தர மறுத்து தெரிவித்ததால் அவரை பழிவாங்குவதற்காக உணவில் முடியை போட்டு நாடகமாடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.