
தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் சமீபத்தில் கட்சி கொடியை அறிமுகப்படுத்தி வைத்தார். நடிகர் விஜய் ராகுல் காந்தி கூறியதால் தான் கட்சி ஆரம்பித்ததாக சமீபத்தில் விஜயதாரணி கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதாவது காங்கிரஸ் கட்சியில் தனக்கு ஒரு பொறுப்பு வேண்டும் என்று டெல்லியில் ராகுலை சந்தித்து விஜய் கேட்டாராம். அப்போது ராகுல் காந்தி உங்களுக்கு இருக்கும் செல்வாக்குக்கு நீங்கள் தனியாக கட்சியை தொடங்கலாம் என்று கூறினாராம். அவர் கூறியபடி தான் விஜய் கட்சி ஆரம்பித்ததாகவும் காங்கிரஸ் கட்சியுடன் அவர் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் விஜயதாரணி கூறி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் ராகுல் காந்தி தன்னை அழைத்தது தொடர்பாக விஜய் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது தனக்கு திடீரென்று ஒரு போன் கால் வந்தது. அப்போது ராகுல் காந்தி என்னை அழைத்தார். அதைக் கேட்டவுடன் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பின்னர் என் தந்தை எஸ்.ஏ சந்திரசேகருடன் சென்று ராகுல் காந்தியை சந்தித்தேன் என்று விஜய் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார். மேலும் விஜய் அளித்த பழைய பேட்டி தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.