
ஸ்ரேயாஸ் ஐயர் ஏன் விளையாடவில்லை என்ற காரணத்தை டாஸ் போடும் போது ரோஹித் சர்மா தெரிவித்தார்.
ஆசிய கோப்பை 2023 இன் சூப்பர் 4 சுற்றில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தற்போது விளையாடி வருகிறது. இந்தப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் 3 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. சூப்பர் ஃபோர் சுற்றில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் சுப்மான் கில் இருவரும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து ஆட்டமிழந்தனர். ரோஹித் சர்மா 49 பந்துகளில் (6 பவுண்டரி,4 சிக்ஸர்) 56 ரன்களும், கில் 52 பந்துகளில் (10 பவுண்டரி) 58 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி 2 விக்கெட் இழந்து 23 ஓவரில் 140 ரன்கள் எடுத்து சிறப்பாக ஆடி வருகிறது. தற்போது கோலியும், ராகுலும் ஆடி வருகின்றனர்.
இதனிடையே கடந்த 2 போட்டியில் கே எல் ராகுல் காயத்தால் ஆடாத நிலையில், இந்த போட்டியில் ஷ்ரேயஸ் ஐயருக்கு (முதுகுவலி காரணமாக) பதிலாக அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பும்ரா அணிக்கு திரும்பியதால் முகமது ஷமி வெளியேறினார்.
இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை 2023க்காக ஆயத்தமாகி வருகிறது, ஆனால் 2023 ஆசியக் கோப்பையில் இந்திய அணி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர்-4 போட்டியில், முதுகுவலி காரணமாக இந்திய அணி ஷ்ரேயாஸ் ஐயரை நீக்கியுள்ளது. .
ஸ்ரேயார் ஐயர் ஏன் வெளியேறினார் :
உலகக் கோப்பைக்கான தயாரிப்புகளில் டீம் இந்தியா முன் இருந்த மிகப்பெரிய கேள்வி எண்-4 இல் பேட்டிங் செய்வதுதான், மேலும் ஆசிய கோப்பையில் அந்த கேள்விக்கான பதிலை ஷ்ரேயர் ஐயர் வடிவில் இந்தியா பெற்றது. இருப்பினும், இன்று டாஸ்க்கு வந்த ரோஹித் ஷர்மா, ஸ்ரேயார் ஐயருக்கு முதுகு பிடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவருக்குப் பதிலாக கேஎல் ராகுலுக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் கூறினார்.
இருப்பினும், ஸ்ரேயாஸ் போட்டிக்கு சிறிது நேரம் முன்பு வரை களத்தில் சில பேட்டிங் பயிற்சி எடுத்துக்கொண்டார், ஆனால் இறுதியில் அவருக்கு சிறிய முதுகு பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக முதுகில் ஏற்பட்ட காயத்தால் ஐயர் சிரமப்பட்டார். இந்த காயத்தில் இருந்து மீண்டு வருவதால் கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் விளையாட முடியவில்லை. அதே நேரத்தில் ஷ்ரேயஸ் ஐயர் போட்டிக்கு சில நிமிடங்கள் வரை பயிற்சி செய்யும்போது எப்படி முதுகுவலி வரும் என ரசிகர்கள் கேள்வியெழுப்புகின்றனர்..
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் ஐயர் அவர் 9 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார், ஆனால் அந்த நேரத்தில் அவரது பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. நீண்ட நாள் காயத்தில் இருந்து மீண்டு வந்த அவர் முன்னதாக கூறியதாவது,“இது அற்புதம், நான் மெதுவாக குணமடைந்ததால் ஆசிய கோப்பையில் விளையாடுவேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் அணியில் தேர்வு செய்யப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
ஷ்ரேயாஸ் ஐயரை உலகக் கோப்பைக்கான நம்பர்-4 பேட்ஸ்மேனாக இந்திய அணி நிர்வாகம் பரிசீலித்து வருகிறது, ஏனெனில் அவர் இந்த எண்ணிக்கையில் விளையாடும்போது 2 சதங்களுடன் ஒருநாள் வடிவத்தில் 800 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.
Rohit Sharma said, "we were looking to bat first anyway".
– Bumrah and KL Rahul replace Shami and Shreyas Iyer (back spasm). pic.twitter.com/oWWZ5lfdG2
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 10, 2023