இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக இன்றைய இளைஞர்கள் ஆபத்தான செயலை கூட செய்வதற்கு தயங்கவில்லை. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. ஒரு இளைஞர் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக ரயில் முன்பக்கத்தில் பின்வாங்கும் ஸ்டண்ட் செய்ய முயன்றுள்ளார். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக ஒரு பெரிய தவறு நடந்துவிட்டது.

அதாவது அந்த இளைஞர் பின்பக்கமாக குட்டிக்கரணம் அடிக்க முயன்ற நிலையில், அருகில் நின்றிருந்த ஒரு வயதான நபர்‌மீது மோதி விடுகிறார். இதனால் அந்த நபர் கீழே விழுந்து காயமடைந்தார். அந்த இளைஞரின் ஸ்டண்ட் முற்றிலும் தோல்வியடைந்தது. இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Sonu Yadav (@sonu_king_flipper_)

இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை @sonu_king_flipper என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு வெளியிட்டுள்ளது. இதைப் பார்த்த மக்கள், “இது பொது இடம், இங்கே இப்படி செய்யக்கூடாது”, “முட்டாள்தனம்! இதனால் மற்றவர் காயம் அடைந்துவிட்டார்” எனக் கடும் விமர்சனம் பதிவிட்டுள்ளனர். பிரபலமாவது என்பதற்காக பொது இடங்களில் ஆபத்தான செயலைத் தவிர்க்க வேண்டும் என்ற கருத்துகள் அதிகமாக எழுந்துள்ளன. மேலும் இந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.