
கேரளாவை சேர்ந்த ஜம்ஷீத் என்பவர் ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளார். ஆனால் தனது படுக்கையில் 5 பேர் அமர்ந்திருந்ததால் ஜம்ஷீத் பத்து மணி நேரம் நின்று கொண்டே பயணம் செய்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அப்போது ரயில்வே போலீஸ், ரயில்வே அதிகாரி என யாரும் ஜம்ஷீத்துக்கு உதவி செய்யவில்லை.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஜம்ஷீத் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட ஜம்ஷீத்துக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே ரயில்வேக்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இப்போது வரை அவருக்கு இழப்பீடு தொகையை வழங்கவில்லை. இதனால் அவர் மேல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.