
மக்கள் பேருந்து, ரயில் போக்குவரத்து மூலம் ஒரு இடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்கு சென்று வருகின்றனர். பெரும்பாலும் இலக்கை விரைவில் அடைவதாலும், கட்டணம் குறைவாக இருப்பதாலும் ரயில் பயணத்தையே மக்கள் தேர்வு செய்கின்றனர். தற்போது ரயிலில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று சென்னை- பாலக்காடு விரைவு ரயிலில் சூர்யா என்ற பெண் பயணம் செய்துள்ளார். இவர் கீழ் பருத்தல் படுத்து தூங்கிக் கொண்டிருந்தபோது மிடில் பெர்த் சரிந்து விழுந்தது. மிடில் பெர்த்தில் படுத்திருந்த நபர் கீழே இறங்கியபோது சங்கிலி நடுவில் கீழ் பெர்த்தில் விழுந்ததாக தெரிகிறது.
இதனால் ரத்தம் சொட்ட சூர்யா காயமடைந்தார். அதன் பிறகு அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சூர்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த ரயிலில் முதலுதவி பெட்டி கூட இல்லை என பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.