இந்தியாவில் மக்கள் பலரும் நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதன்படி தற்போது குழந்தைகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவுகளில் சில மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி இதற்கு முன்பு வரை குழந்தைகளுக்கான டிக்கெட் மூலமாக பெற்றுக் கொள்ளும் வசதி இருந்த நிலையில் தற்போது ஆன்லைன் மூலமாகவும் குழந்தைகளுக்கான முன்பதிவு டிக்கெட் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது 1 முதல் 4 வயது வரையிலான குழந்தைகள் ரயிலில் பயணம் செய்தால் அவர்களுக்கான டிக்கெட் அவசியமில்லை. அதே சமயம் ஐந்து முதல் 12 வயது வரை ஆன குழந்தைகள் ரயிலில் பயணித்தால் அவர்களுக்கு பாதி கட்டணம் வசூலிக்கப்படும். குழந்தைகளுக்கு தனி பெர்த் வேண்டுமானால் அதற்கான முழு கட்டணத்தை பயணிகள் செலுத்த வேண்டி இருக்கும்.