இந்தியாவில் நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு மக்கள் பலரும் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் விரும்புகின்றனர். அதே சமயம் பயணிகளின் வசதிக்காகவும் இந்திய ரயில்வே பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையில் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு லோயர் பெர்த் தொடர்பாக இந்திய ரயில்வே புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி டிக்கெட் புக் செய்யும் போது மாற்றுத்திறனாளிகள் லோயர் பெர்த் குறிப்பிட விட்டாலும் அவர்களுக்கு ஸ்லீப்பர் கோச்சில் 4, ஏசி கோச்சில் இரண்டு லோயர் பெர்த்துக்கள் ஒதுக்கப்படும். மேலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்லீப்பரில் ஆறு முதல் ஏழு, ஏசி கோச்சில் ஐந்து லோயர் பெர்த்துக்கள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.