
நாட்டில் பெரும்பாலான பயணிகள் ரயிலில் செல்லும் நிலையில் முன்பதிவு செய்து பயணிகள் ஏறும் ரயிலில் திடீரென முன்பதிவு செய்யாத பயணிகள் கூட்டமாக ஏறுவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பயணிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு நடக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் ஒரு ரயிலில் கழிவறையை கூட பயணிகள் விட்டு வைக்காமல் அதற்கு முன்பு படுத்து தூங்கிய காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது சத்தீஸ்கர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கழிவறை பெட்டியின் முன்பு பயணிகள் படுத்து துங்கியுள்ளனர். இந்த தொடர்பான வீடியோவை சச்சின் குப்தா என்பவர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் முன்பதிவு செய்த பயணிகள் மற்றும் முன்பதிவு செய்யாதவர்கள் கூட்டமாக ரயிலில் ஏறுகிறார்கள். அவர்கள் நடைபாதை மற்றும் கழிவறையின் முன்பு படுத்து தூங்குகிறார்கள். இதனால் கழிவறைக்கு கூட செல்ல முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகினர். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ये तस्वीर छत्तीसगढ़ एक्सप्रेस (ट्रेन नंबर 18237) की है। सीट, फ्लोर, गेट, गैलरी, बाथरूम…जिसको जहां जगह मिली, वहीं बैठे-बैठे सो गया।
यूरेशिया वाले रेल मंत्री जी, थोड़ा गरीबों वाली ट्रेनों पर भी ध्यान दीजिए, डिब्बे बढ़वा दीजिए। pic.twitter.com/SPYrgGHi4t
— Sachin Gupta (@SachinGuptaUP) June 13, 2024