
தமிழில் காதலர் தினம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை சோனாலி பெந்த்ரே. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த இவர் தற்போது குணமாகி மீண்டும் வந்துள்ளார். 90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்த இவரை பார்க்க முடியாததால் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் 90களில் தனது ரசிகர்கள் செய்த அதிர்ச்சியான சம்பவத்தை நடிகை பகிர்ந்து கொண்டு உள்ளார். அதில், ஒருமுறை போபாலை சுற்றிப்பார்க்க சென்று இருந்தேன். அப்போது என்னை சந்திக்க முடியாமல் போனதால் என்னுடைய ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக அங்கிருந்தவர்கள் கூறினார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அதேபோல எனக்கு இமெயிலில் ஒரு கடிதம் வந்தது. அதில் சிவப்பு நிறத்திலான எழுத்துக்கள் இருந்தன. அது ரத்தமா? என்று சோதித்து பார்த்து ஆச்சரியப்பட்டேன். இப்படியும் செய்வார்களா, எப்படி ஒரு மனிதனை இப்படி ஒரு இடத்தில் வைத்து பார்க்க முடிகிறது? இது போன்ற ரசிகர்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.