
தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகம் சென்னை பனியூரில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் வைத்து நேற்று தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தின் போது ரஜினி முதல் மாநாடு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது என்ற கூறியது தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக விஜய் கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது.
இதன் காரணமாக ரஜினி ரசிகர்களை அரவணைத்து செல்லுமாறு நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளாராம். முதலில் திரைத்துறையில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் போட்டி போட்ட நிலையில் அதன் பிறகு விஜய் மற்றும் ரஜினி என ரசிகர்கள் போட்டி போட தொடங்கினார்கள். இந்த நிலையில் ரஜினிகாந்த் சமீபத்தில் செய்தியாளர்களின் சந்தித்தபோது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளதாக கூறி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். மேலும் இதன் காரணமாக தற்போது ரஜினி ரசிகர்களை அரவணைத்து செல்லுமாறு விஜய் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.