பிரபல கன்னட நடிகர் தர்ஷன்  தூகுதீபா. இவருடைய தீவிர ரசிகர் ரேணு ரேணுகா சாமி என்பவர் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக தர்ஷன் பவித்ரா கவுடா உள்ளிட்ட  17 பேர காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ரேணுகாசாமி நடிகை பவித்ராவுக்கு ஆபாச தகவல் அனுப்பியதால் படுகொலை செய்யபட்டதாக  கூறப்பட்டது. இதனால் கோபமடைந்த தர்ஷன் மற்றும் அவருடைய கூட்டாளிகளோடு சேர்ந்து ரேணுகா சாமியை படுகொலை செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது நடிகர் தர்ஷனின் முன்னாள் மேலாளர் மல்லிகார்ஜுன் என்பவர் கடந்த எட்டு வருடங்களாக காணாமல் போய் உள்ளார். தர்ஷனிடம் மல்லிகார்ஜூன் 2 கோடி வரை மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது. தர்ஷன் பண்ணை வீட்டின் மேலாளராக இருந்த ஸ்ரீதர் என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவத்தால் இந்த வழக்கில் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் ரேணுகாசாமியை கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொலை செய்த போது அதனை நடிகை பவித்ரா கௌடா பக்கத்தில் இருந்து ரசித்து வேடிக்கை பார்த்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.