
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி, லைலா, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் நிலையில் 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்று கோட் படத்தின் டிரைலர் வீடியோ வெளியாக இருக்கிறது. இதனை பட குழு போஸ்டர் வெளியீட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் அதன்படி இன்று மாலை 5 மணிக்கு கோட் படத்தின் டிரைலர் வெளியாக இருக்கிறது. இது விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.