இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தற்போது ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் போட்டியை காண ஒவ்வொரு மைதானத்திற்கும் ரசிகர்கள் ஆர்வத்துடன் செல்கிறார்கள். இந்நிலையில் ஐபிஎல் போட்டி டிக்கெட் விலையை விட ஜிஎஸ்டி வரி அதிகமாக இருப்பதாக தற்போது ஒரு ட்விட்டர் பதிவில் செய்தி வெளியிடப்பட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஐபிஎல் போட்டிக்கு டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்படும் போது அதனுடன் ஜிஎஸ்டி வேடிக்கை வரி போன்றவைகளும் இணைக்கப்படுகிறது. அதாவது அரசு நிர்ணயித்த வரியை விட 25 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.

உதாரணமாக 2343 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்யப்படும் போது அதில் 585 மட்டும் தான் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் டிக்கெட் வாங்குபவர்களிடம் 781 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மேலும் இதனால் டிக்கெட் வாங்குபவர்களிடம் 171 வரையில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உதாரணமாக் ரூ.4,000 மதிப்புள்ள ஒரு IPL டிக்கெட் உங்களை ஒரு போட்டிக்கு அழைத்துச் செல்லும் வாயிலாக மட்டுமல்ல, இந்தியாவின் ‘Tax-on-Tax’ (வரி மீது வரி) முறைமை குறித்த ஒரு முக்கிய பாடத்தையும் கற்றுத்தருகிறது. இது ஒரே விலையாகத் தெரிந்தாலும், அதற்குள் இரண்டு விதமான வரிகள் அடுக்கி கட்டப்பட்டுள்ளன. இந்த விவரங்களை “efiletax” என்ற வரி ஆலோசனை நிறுவனம் X (முன்னாள் Twitter) தளத்தில் பகிர்ந்துள்ளது.

டிக்கெட் விலையின் பின்னணி – சுத்தமாக விளக்கம்

அடிப்படை விலை: ₹2,343.75

வேடிக்கை வரி (Entertainment Tax – 25%): ₹781.25

மொத்தம்: ₹3,125.00

ஜிஎஸ்டி (GST – 28%): ₹875.00

இதில் CGST: ₹437.50

மற்றும் SGST: ₹437.50

 

இந்த ₹875 ஜிஎஸ்டி, அடிப்படை விலையில் மட்டும் அல்ல, அதற்குள் ஏற்கனவே சேர்க்கப்பட்ட வேடிக்கை வரியுடன் சேர்த்த மொத்த தொகைக்கு மேல் கணக்கிடப்படுகிறது. அதாவது, நீங்கள் ஒரு வரிக்கே மீண்டும் வரி செலுத்துகிறீர்கள்.

இந்த ‘Tax-on-Tax’ பாணி வெறும் IPL போட்டியில் மட்டுமின்றி. இசை நிகழ்ச்சிகள், காமெடி ஷோக்கள், திருவிழாக்கள் என பல்வேறு பொதுக் கூட நிகழ்வுகளிலும் இதே முறை பின்பற்றப்படுகிறது. “ஒரே நாடு, ஒரே வரி” என்ற கோஷத்தின் கீழ் மறைமுகமாக அதிக வரி வசூலிக்கப்படுகிறது என்று பதிவில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

மற்ற நாடுகள் எப்படி?

அமெரிக்கா: ஜிஎஸ்டி இல்லை, இடைக்கால அமியூஸ்மென்ட் டாக்ஸ்

யூகே: ஒரே மாதிரியான VAT – 20%

இந்தியா: வேடிக்கை வரி + ஜிஎஸ்டி

“நீங்கள் ₹4,000 செலுத்தியதில் ஒரு பகுதிக்கே போட்டி இருக்க, மீதி எல்லாம் வரி,” என efiletax சாடுகிறது. “ஜிஎஸ்டி வரிகளை எளிமைப்படுத்தும் என கூறும் போது, இந்த IPL டிக்கெட்டை காட்டுங்கள்” என அந்த பதிவு கலாய்க்கிறது.

https://x.com/efile_tax/status/1905825790731673751?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1905825790731673751%7Ctwgr%5E70ad8778646f2bb03ac84494b3a859fc36bead0d%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F