தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோகிரீன் மற்றும் uv creations நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் ஹீரோயினாக திஷா பதானி நடித்துள்ள நிலையில், பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். அதன்பிறகு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்த படம் நடிகர் சூர்யாவின் கேரியரில் மிகப்பெரிய பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகி வெளிவந்துள்ளது. இந்நிலையில் கங்குவார் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி உலகம் முழுவதும் மொத்தமாக 40 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும் இந்தியாவில் மட்டும் 22 கோடி வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு சூர்யாவின் கேரியரில் சிங்கம் 2 படம் தான் முதல் நாளில் அதிகபட்சமாக 12 கோடி வசூலித்தது. மேலும் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளதால் இனி வரும் நாளில் வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.