இந்தியாவில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் என்பது பொதுமக்கள் மத்தியில் மிக அதிக அளவில் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளும் எளிதாக இருப்பதால் பெரும்பாலான மக்கள் அதனை பயன்படுத்துகிறார்கள். பொதுவாக பெரிய வர்த்தகம் முதல் சில்லறை வர்த்தகம் வரை அனைத்திற்கும் யுபிஐ பண பரிவர்த்தனைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

இதனால் யுபிஐ பண பரிவர்த்தனையை மேலும் அதிகரிக்க அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகள் வெளிவருகிறது. அந்த வகையில் தற்போது யுபிஐ பண பரிவர்த்தனையில் ஒரு சூப்பரான அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி Circle என்ற புதிய வசதியை NPCI அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஒருவருடைய யுபிஐ செயலியை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் என மொத்தம் ‌5 பேர் வரை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் நன்மை அளிக்கக்கூடிய அப்டேட் ஆக இருந்தாலும் இதனை கவனத்துடன் பயன்படுத்துவது மிகவும் அவசியமாகும்.