தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது விஜய் அவர்கள் அரசியல் வருவதற்கு ஏராளமான காரணங்கள் சொல்லப்பட்டாலும், அதிகமாக சொல்லப்படக்கூடிய ஒரு காரணம் அவர் இதற்கு முன்னால் ஆட்சியில் இருந்த அதிமுக அவருக்கு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தான். அவர் அரசியல் வருகை என்பது தற்போது அமைந்திருக்கிறது.

தனது படங்களை திரையில் ஓட விடாமல் தடுப்பது, தனிப்பட்ட முறையில் பல இன்னல்களை அளிப்பது என அதிமுக தரப்பில் பல விஷயங்கள் விஜய் அவர்களுக்கு எதிராக செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக 100 ஆண்டு கால தமிழ் சினிமா கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றில் விஜய் அவர்களை கடைசி வரிசையில் அமர வைத்து அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அவமானப்படுத்தியதாக சில வீடியோக்களை எடுத்து எடிட் செய்து தற்போது,

யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன் என்ற ட்ரெண்டிங்கில் இருக்கும் அசல் கோளாறின் பாடல் அதுக்கு பின்னணி இசையாக வடிவமைக்கப்பட்டு அதனுடன்  தற்போதைய அரசியல் வருகையையும் ஒப்பிட்டு வீடியோவாக எடிட் செய்யப்பட்டு இணையத்தில் பதிவிடப்பட அது தற்போது வைரலாகி வருகிறது.