
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பலவிதமான வீடியோக்கள் வெளியாகி நம்மை ஆச்சரியமூட்டும் வகையில் இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒருவர் புதிதாக மோட்டார் பைக் வாங்கியுள்ளார். அந்த பைக்குக்கு பூஜைகள் முடிந்த பிறகு கேக் வெட்டுகிறார்கள். இதில் என்ன கொடுமை என்றால் அந்த பைக் கேக்கை வெட்டுகிறது.
அதாவது அந்த பைக்கில் ஒரு கத்தியை ஸ்டிக்கர் வைத்து ஒட்டியுள்ளனர். பின்னர் ஒருவர் பைக்கை மெதுவாக முன்னோக்கி ஓட்டி கேக்கை வெட்டுகிறார். அந்த கேக்கை ஒருவர் பிடித்துள்ளார். மேலும் இது குறித்தான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram