தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் அஜித்குமார். இவருக்கு மத்திய அரசு கலைத்துறையில் சிறந்த சேவை ஆட்சியதற்காக பத்மபூஷன் விருது வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. நடிகர் அஜித் விருதுக்கு 100% தகுதியானவர். இவ்வளவு வருடங்கள் இல்லாமல் தற்போது அஜித்துக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது பேசும் பொருளாக மாறி உள்ளது. அதே சமயத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கியுள்ள நிலையில் அஜித்துக்கு இணையாக விஜய்க்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக தளபதி திகழ்கிறார். அப்படி இருக்கும்போது விஜய்க்கும் அந்த விருதை வழங்கி இருக்கலாம் என்பதை அவருடைய ரசிகர்களின் கருத்து. ஆனால் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் தற்போது அவருக்கு இணையாக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள அஜித்தை தங்கள் பக்கம் இருக்க திமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டி போடுவதாக கூறப்படுகிறது.

முன்னதாக அஜித் கார் ரேஸில் கலந்து கொண்ட போது தமிழக அரசின் லோகோவை காட்சிப்படுத்தினார். இதற்காக நம் திராவிட மாடல் அரசின் லோகோவை காட்சிப்படுத்திய நடிகர் அஜித் என்று கூறி உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அஜித்துக்கு மத்திய பாஜக அரசு பத்மபூஷன் விருது அறிவித்துள்ளது. இதன்மூலம் அஜித்தை தங்கள் பக்கம் இழுக்க திமுக மற்றும் பாஜக போட்டி போடுவதாக கூறப்படும் நிலையில் சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி அஜித்துக்கு வாழ்த்து கூறும் போது ஜெயலலிதா அம்மையாருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து சொன்னார்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் 2026 தேர்தலில் போட்டியிடும் நிலையில் கண்டிப்பாக திராவிட கட்சிகளுக்கு மிகப்பெரிய சவாலாக அமைவார் என்பதே பலரது கருத்தாக இருக்கிறது. இந்த சூழலில் 2024 ஆம் ஆண்டு நடிகர் விஜயின் ரசிகர் ஒருவர் சமூக வலைதள பக்கத்தில் நடிகர் விஜய் பாஜகவுக்கு ஆதரவு கொடுக்காவிட்டால் நடிகர் அஜித்துக்கு பத்ம விருது வழங்குவார்கள் என்று சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். தற்போது அவர் சொன்னது போன்றே நடிகர் அஜித்திற்கு இந்த வருடம் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புகைப்படத்தை தற்போது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வைரல் ஆக்கி வருகிறார்கள்.