
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. பாம்பை கண்டு பயப்படுவதற்கு முக்கிய காரணம் அதனுடைய விஷம் தான். பாம்புகளுக்கு பற்களில் விஷம் இருப்பதற்கு காரணம் தன்னுடைய இறை வேட்டையாடுவதற்கு. ஆனால் பாம்புகள் மனிதர்களை கடிப்பது வேட்டையாடுவதற்கோ அல்லது கொல்ல வேண்டும் என்ற நோக்கத்திலும் அல்ல. மாறாக மனிதர்கள் தன்னை கொன்றுவிடுவார்கள் என்று தான்.
இப்படி பாம்புகளைக் கண்டால் படையே நடுங்கும் என்று சொல்பவர்களுக்கு மத்தியில் ராஜநாக பாம்பை ஷாம்பு போட்டு குளிப்பாட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒருவர் 10 முதல் 12 அடி நீளமும், கொடிய விஷயமும் உடைய ராஜநாகத்தை எந்த பயமும் இல்லாமல் ஷாம்பு போட்டு குளிப்பாட்டுகிறார். அந்தப் பாம்பு கடிக்காமல் அவருடன் சிறுகுழந்தை போல் விளையாடிக் கொண்டே குளிக்கிறது.
View this post on Instagram