வெளிநாட்டுப் பயணங்களுக்கு மத்திய அரசு புதிய வரி அல்லது கூடுதல் கட்டணம் விதிக்கப் போவதாகப் பரவிய செய்திகளால் பயணிகள் மத்தியில் பெரும் கலக்கம் ஏற்பட்டது. குறிப்பாக, சிஎன்பிசி-டிவி18 (CNBC-TV18) ஊடகம் வெளியிட்ட செய்தியில், நிதி நெருக்கடியைச் சமாளிக்க அரசு இத்தகைய முடிவை எடுக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் செய்தி காட்டுத்தீயாகப் பரவிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 15) இதற்கு நேரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

​தனது எக்ஸ் (X) தளத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள பிரதமர், “இந்தச் செய்தியில் துளியும் உண்மையில்லை, இது முற்றிலும் பொய்யானது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்க்கைச் சூழலை எளிதாக்குவதே (Ease of Living) அரசின் நோக்கம் என்றும், வெளிநாட்டுப் பயணங்களுக்கு எந்தக் கூடுதல் வரியும் விதிக்கும் எண்ணம் அரசிடம் இல்லை என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார். பிரதமரின் இந்த அதிரடி விளக்கம், வெளிநாடு செல்லத் திட்டமிட்டிருந்த கோடிக்கணக்கான இந்தியர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.