கோயம்புத்தூரில் நடைபெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ‘ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன்’ இசை கச்சேரியில், இசையமைப்பாளர் அனிருத் எதிர்பாராத விதமாக மேடையில் தோன்றி ரசிகர்களுக்கு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியை அளித்தார்.
மேலும் பல ஆண்டுகளாகத் திரையில் இவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்க்கக் காத்திருந்த ரசிகர்களுக்கு, இந்தச் சந்திப்பு ஒரு மறக்க முடியாத தருணமாக அமைந்தது. அனிருத் மேடைக்கு வந்த தருணத்தில் அரங்கமே அதிரும் வகையில் ரசிகர்கள் உற்சாகக் குரல் எழுப்பினர். இந்த மேடையில் இருவரும் இணைந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘எதிர்நீச்சல் அடி’ பாடலைப் பாடினர்.
Anirudh’s surprise entry at HiphopTamizha’s concert 🤩
The Duo has sung their famous EthirNeechal song🔥pic.twitter.com/ryiPFj0xIU
— AmuthaBharathi (@CinemaWithAB) March 7, 2026
“>
இது குறிப்பாக, ஹிப்ஹாப் ஆதி மற்றும் அனிருத் ஆகிய இருவரும் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்களாகத் தடம் பதித்த ஆரம்பக் காலத்தில் இணைந்து பணியாற்றிய இந்தப் பாடல், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நேரலையில் பாடப்பட்டது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சர்ப்ரைஸ் என்ட்ரி குறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.
