
பிரேசில் நாட்டின் சால் ஃபாலோ நகரை நோக்கி நேற்று மாலை பயணிகள் பேருந்து ஒன்று 37 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரியின் மீது மோதியது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 37 பேர் உயிரிழந்ததாகவும் சிலர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பேருந்தின் டயர் வெடித்தது விபத்துக்கு முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது.