
பீகாரின் பெகுசராய் மாவட்ட ஆட்சியரின் ஊதியத்தை மாவட்ட நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நிலத்தை மீட்டு தர தவறியதாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 35 ஆண்டுகால நில தகராறில் அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டு ஷ்யாம் பிரசாத் என்பவரிடம் கொடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு கடந்த 2014-ஆம் ஆண்டு பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
பத்து ஆண்டுகள் ஆகியும் அந்த உத்தரவை நிறைவேற்றாமல் இருந்துள்ளனர். எனவே உத்தரவை நிறைவேற்றாமல் தவறியது, உரிய பதிலளிக்காமல் இருந்தது உள்ளிட்ட குற்றசாட்டுகளின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரின் ஊதியத்தை மாவட்ட நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.