
நாம் தமிழர் கட்சியிலிருந்து பிரிந்து புரட்சித்தமிழர் கட்சி தொடங்கி கொடி அறிமுக நிகழ்ச்சியில் பேசிய ராஜன், சீமான் குறித்து பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அதில் பேசிய அவர் , நாம் தமிழர் கட்சியில்
நான் மாவட்ட பொறுப்பில் இருந்தவன். மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்தவன். 2018 இல் தான் வெளியே வந்தேன். முதலில் நல்ல பேச்சாளராக சீமான் இருந்தார். 2009 இல் கட்சியாக உள்ளே வந்த அவரை ஆதரித்தோம். மீடியா ஃபோக்கஸ் இவர் மேல் இருந்ததால் ஆதரவளித்தோம். இவருக்கு ஆதரவு அளித்த லட்சக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருத்தன். தலைமையெல்லாம் தேவையில்லை.
தமிழ் தேசியம் தான் தேவை. தமிழர்களின் ஒற்றுமை தேவை. தமிழனுடைய வளர்ச்சி தேவை. என்று நினைத்து தான் ஆதரவளித்தோம். ஆனால் இவர் அதை தன் சுயநலத்திற்காக பயன்படுத்திக்கொண்டு இந்த நிமிடம் வரை நாம் தமிழரில் இருக்கும் ஏதாவது ஒரு தொண்டனுக்கு ஏதாவது செய்திருக்கிறாரா ? கேட்டு சொல்லுங்கள். ஒருத்தருக்கும் ஒன்றும் செய்ததில்லை , செய்யவும் மாட்டார் என்று தெரிவித்துள்ளார்.