
தாய்லாந்தின் எலிஃபன்ட் நேச்சர் பார்க் பகுதியில் கனமழையில் இரண்டு யானைகள், தங்கள் பராமரிப்பாளரான லெக் சைலர்டை மழையிலிருந்து காத்து நின்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது. ‘சேவ் எலிஃபன்ட் ஃபவுண்டேஷன்’ நிறுவனர் லெக் சைலர்ட், இந்த உணர்ச்சி மிகுந்த தருணத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அதில், சபா மற்றும் தொங் ஏ எனும் யானைகள், மழையும் இடியுடன் கூடிய சூழ்நிலையில், தங்கள் பராமரிப்பாளரின் அருகே வந்து, தங்களது பருமனான உடலை பயன்படுத்தி, அவரை மழையில் நனைவதிலிருந்து காப்பாற்ற முயன்றன. “நான் ரெயின்கோட் போட்டதும் சபா என்னை தனது தும்பிக்கையால் தொட்டு நன்கு இருக்கிறேனா என பார்த்து, பின்னர் ஒரு மென்மையான தும்பிக்கைக் கிச் கொடுத்தது. அது ‘கவலை வேண்டாம், நன்றாக இருக்கும்’ என்றபோல் இருந்தது” என லெக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. யானைகள் காட்டிய இந்த நட்பும் பாசமும், “மனதை உருக்கும் தருணம்”, “மௌனமான அழகு” என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். “யானைகள் என்பது வெறும் விலங்குகள் அல்ல; அவர்கள் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய உயிர்கள். அவர்கள் ஒருவரை நம்பினால், குடும்பமாக ஏற்றுக் கொள்கின்றனர்” என லெக் மேலும் தெரிவித்துள்ளார். தாய்லாந்தின் “யானை விசிறி” என அழைக்கப்படும் லெக் சைலர்ட், கடந்த பல ஆண்டுகளாக தவமிருந்த யானைகளை மீட்டு பராமரித்து வருகிறார். தற்போது, 100-க்கும் மேற்பட்ட மீட்கப்பட்ட யானைகள், அவரது பாதுகாப்பு பூங்காவில் வசித்து வருகின்றன.
View this post on Instagram