சென்னை மேற்கு மாம்பலத்தில் வெங்கட்ரமணன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இவர் தனது வீட்டின் அனைத்து மின் சாதனங்களையும் செல்போன் மூலம் கட்டுப்படுத்தும் ஆட்டோமேஷன் செய்துள்ளார்.

வெங்கட்ரமணன் தற்போது நெதர்லாந்து நாட்டில் உள்ளார். இந்த நிலையில் வெங்கட்ரமணன் வீட்டிற்குள் மர்ம நபர்கள் திருடுவதற்காக நுழைந்தனர். அவர்கள் மோட்டாரை ஆன் செய்ததால் வெங்கட்ரமணனுக்கு அலர்ட் சென்றது.

அவர் சிசிடிவி மூலம் கொள்ளையர்கள் வீட்டில் இருப்பதை பார்த்து பக்கத்து வீட்டு நபருக்கு தகவல் தெரிவித்தார். அவர் போலீசாரை வரவழைத்தார்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மர்ம நபர்களை விரட்டி பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.