உலகம் முழுவதும் whatsapp செயலியை கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு அவ்வபோது புதுப்புது அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வாட்ஸ் அப்பில் உங்கள் மொபைல் எண்ணை பகிராமல் கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமாக தகவலை பரிமாறிக் கொள்ள முடியும்.

அதாவது whatsapp செயலியில் செட்டிங்ஸ் என்ற அம்சத்தை திறந்து உங்கள் சுயவிவரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்ததாக share என்ற விருப்பத்தை கிளிக் செய்து QR குறியீடு பகிர்வது என்ற அம்சத்தை தேர்வு செய்ய வேண்டும். அதில் உள்ள கியூ ஆர் குறியீட்டை தொடர்பு கொள்ள விரும்புவர்களுக்கு பகிர வேண்டும். இதனால் ஹேக்கர்கள் மொபைல் எண்ணை பயன்படுத்தி உங்கள் வங்கி கணக்கை ஹேக் செய்வதிலிருந்து தப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.