கன்னியாகுமரி மாவட்டம் அருகில் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்(50). இவர் நாகர்கோவில் அசம்பு சாலை பகுதியில் பழைய நகைகளை வங்கிகளில் இருந்து மீட்டு கொடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை கண்ணனிடம் தோப்புவிளை பகுதியை சேர்ந்த சுதர்சன்(24) என்பவர் பேசியுள்ளார். அவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் 196 கிராம் நகைகளை அடகு வைத்திருப்பதாக கூறினார்.

மேலும் அதனை மீட்டு விற்பனை செய்ய 12 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுவதாக தெரிவித்தார். இதனை நம்பி கண்ணன் சுதர்சனிடம் 12 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் அந்த பணத்தை வாங்கிக் கொண்டு சுதர்சன் தலைமறைவானதால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கண்ணன் இரணியல் காவல் உதவி ஆய்வாளர் மகேந்திரனிடம் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சுதர்சனை கைது செய்து 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை மீட்டனர். மீதமுள்ள 2 லட்சம் ரூபாய் பணத்தை சுதர்சன் நண்பர்களுக்கு கொடுத்துவிட்டு, 20 ஆயிரம் ரூபாய் பணத்தை செலவு செய்தது தெரியவந்தது.