திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக மேட்டுப்பாளையம், தூத்துக்குடி வரை வாரம் இரண்டு முறை இன்று முதல் விரைவு ரயிலானது இயக்கப்படுகின்றது. அதன்படி மேட்டுப்பாளையத்தில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7:35 மணிக்கு புறப்பட்டு கோவை, பொள்ளாச்சி வழியாக உடுமலைக்கு இரவு 10 மணிக்கு வரும்.

அதே போன்று தூத்துக்குடியில் இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3:30 மணிக்கு உடுமலை ரயில் நிலையம் வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையானது ஜூலை 20 ஆம் தேதி முதல் துாத்துக்குடியில் இருந்து  தொடங்குகிறது. இந்த புதிய ரயிலின் தொடக்க விழா ஜூலை 19 ஆம் தேதி காலை 10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் நடைபெறுகிறது.