முன்னணி பஞ்சாபி பாடகர் ஏ.பி. தில்லான் மும்பையில் நடத்திய இசை கச்சேரி, ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. இந்த நிகழ்ச்சியின் போது, தில்லான் தனது தீவிர ரசிகை ஒருவரை மேடைக்கு அழைத்து இன்பதிர்ச்சி அளித்தார்.
மேடைக்கு வந்த அந்தப் பெண்ணை அவர் பாசத்துடன் கட்டித்தழுவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு, தான் அணிந்திருந்த விலை உயர்ந்த சொகுசு கைக்கடிகாரம் மற்றும் ஒரு பிரத்யேக நெக்லேஸ் ஆகியவற்றைப் பரிசாக வழங்கி ஒட்டுமொத்த கூட்டத்தையும் வியப்பில் ஆழ்த்தினார்.
View this post on Instagram
“>
இந்நிலையில் அவர் தனது ‘ஒன் ஆஃப் ஒன்’ இந்தியச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த மும்பை கச்சேரி, இசையைத் தாண்டி ஏ.பி. தில்லானின் பெருந்தன்மையான செயலால் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சுமார் 54 கோடி ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரத்தை அணிந்து அவர் ஆடியது ஒருபுறம் பேசுபொருளாக இருக்க, மற்றொருபுறம் தனது ரசிகைக்கு அவர் காட்டிய இந்த அன்பு பலரையும் கவர்ந்துள்ளது. பாலிவுட் நடிகை தாரா சுதாரியாவின் வருகையும், இந்த கச்சேரியின் உற்சாகத்தை மேலும் இரட்டிப்பாக்கியது.
