மெஸ்ஸியின் ஜெர்சி நம்பர் 10 க்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினா அணியிலிருந்து அவர் ஓய்வு பெற்ற பிறகு இந்த ஜெர்சியை யாரும் பயன்படுத்த முடியாது. இது அவருக்கு நாங்கள் அளிக்கும் சிறிய கௌரவம் என அர்ஜென்டினா கால்பந்து வாரிய தலைவர் கிலாடியோ டாபியா தெரிவித்துள்ளார். சச்சினின் ஜெர்சி நம்பர் 10க்கும், தோனியின் ஜெர்ஸி நம்பர் 7க்கும் பிசிசிஐ ஓய்வு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.