சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு  ஒன்றிய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீடு குழு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி இருக்கிறது. தமிழக அரசு தாக்கல் செய்த சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு ஆய்வறிக்கையை ஏற்று மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் தந்தையும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி சென்ற 2018ம் வருடம் ஆகஸ்டு மாதம் 7-ஆம் தேதி மரணமடைந்தார்.

இதையடுத்து அவருக்கு சென்னை மெரினா கடற்கரையில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பாக நினைவிடம் கட்டப்பட்டது. இந்நிலையில் கலைஞருக்கு மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்க திமுக அரசு திட்டமிட்டது. ரூபாய் 81 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ள இந்த பேனா சிலைக்காக கடலில் நடுவே 8551 சதுர மீட்டர் இடம் பயன்படுத்தப்படவுள்ளது. இதற்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என பெயர் வைக்கப்படவுள்ளது.