பெடரல் வங்கியானது நேஷனல் காமன் மொபிலிட்டி கார்ட் என்ற ஒருங்கிணைந்த டெபிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது. நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு என்பது ரூபே காண்டாக்ட்லெஸ் டெபிட் கார்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வசதி. இது கார்டு ரீடரில் கார்டை தட்டுவதன் மூலமாக மெட்ரோ நிலையங்கள், பேருந்து போன்றவற்றில் ஆஃப்லைன் முறையில் பணம் செலுத்த முடியும். இந்த முயற்சி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதன் மூலம் பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சி என்று பெடரல் வங்கி தெரிவித்துள்ளது.

நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டை செயல்படுத்தவும் ஆஃப்லைன் பரிவர்த்தனைகளுக்கு கார்டை  பயன்படுத்தவும்  மொபைல் பேங்கிங் ,இன்டர்நெட் பேங்கிங் மூலம் காண்டாக்ட்லெஸ்  அம்சத்தை இயக்க வேண்டும். அதை செயல்படுத்தீய பிறகு பயனர்கள் மெட்ரோ நிலையங்களில் உள்ள வாடிக்கையாளர் சேவை வசதிக்கு சென்று தொடங்கலாம். இந்த கார்டில் பணத்தை ஏற்றுக் கொள்ளலாம்.