கடந்த 2023 ஆம் வருடம் மே மாதம் 2000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியின் மூலமாக திரும்ப பெறப்பட்டது. அதன்படி செப்டம்பர் மாதம் முதல் முழுவதுமாக 2000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் புழக்கத்திலிருந்து நீக்கப்பட்டது.  தொடர்ந்து தற்பொழுது 500 ரூபாய் நோட்டுகள் தான் நாட்டின் உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளாக புழக்கத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் நடந்து வரும் மாநிலங்களவை கூட்டத்தில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பதில் அளித்துள்ளதாவது, கள்ள நோட்டுகளின் புழக்கத்தை தடுக்கும் விதமாகவும், அதிக காலம் புழக்கத்தில் இருக்கும் வகையில் ரூபாய் நோட்டுகளின் தரம் உயர்த்துவது தொடர்பாக நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. ஆனால் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வது எந்த தொடர்பான எந்த ஒரு முடிவும் இதுவரைக்கும் அரசு எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.