வீட்டிற்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டு, புது மனைவியுடன் வீட்டிற்குள் நுழைந்த கணவனுக்கு, முதல் மனைவி தர்ம அடி கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. தனிமனித ஒழுக்கம் மற்றும் உறவுகளுக்கு இடையிலான சிக்கல்களை மையமாக வைத்து இந்த வீடியோ பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், நபர் ஒருவர் தனது இரண்டாவது மனைவியுடன் மிகுந்த நம்பிக்கையுடன் வீட்டிற்குள் நுழைகிறார். ஆனால், அவரை எதிர்கொண்ட முதல் மனைவி, சற்றும் எதிர்பாராத விதமாக ஆக்ரோஷமாகப் பேசத் தொடங்குகிறார். ஆரம்பத்தில் வாக்குவாதமாகத் தொடங்கிய இந்தச் சம்பவம், அடுத்த சில நிமிடங்களில்பெரும் மோதலில் முடிந்தது.

இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது அல்லது இதன் உண்மைத்தன்மை என்ன என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், சமூக வலைத்தளங்களில் இது ‘ட்ரெண்டிங்’ தலைப்பாக மாறியுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த சமூக வலைத்தளப் பயனர்கள், பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அதாவது “ஏதோ பிறந்தநாள் விழாவுக்குச் சர்ப்ரைஸ் கொடுக்க வருவது போல இவ்வளவு தைரியமாக வந்து மாட்டிக்கொண்டாரே இந்த நபர்!” என ஒருவர் பதிவிட்டுள்ளார். புதிய மாடல் போனை அப்டேட் செய்வது போல இரண்டாவது மனைவியை இவர் அறிமுகம் செய்ய முயன்றார். ஆனால், இந்த மாடல் பழைய சிஸ்டத்துடன் செட் ஆகாது என்பதை முதல் மனைவி தெளிவாக உணர்த்திவிட்டார்” என மற்றொருவர் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.

“வாழ்க்கையை ஏதோ சினிமா என்று நினைத்துவிட்டார் போலும், ஆனால் இது மெகா சீரியலை விட மோசமான க்ளைமாக்ஸில் முடிந்துவிட்டது” என இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் நகைச்சுவையாகப் பார்க்கப்பட்டாலும், சட்டவிரோதமான பலதார மணம் மற்றும் குடும்ப உறவுகளில் ஏற்படும் விரிசல்கள் குறித்துச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். “தனிப்பட்ட விருப்பங்கள் என்ற பெயரில் பொதுவெளியில் இது போன்ற நிகழ்வுகள் அரங்கேறுவது கண்டிக்கத்தக்கது” என்றும் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது இந்த ‘வைரல் வீடியோ’ லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து இணையத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.