
பிரபல இஸ்ரேலிய வரலாற்றாசிரியர் யுவல் நோவா ஹராரி, இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போர் குறித்து பரபரப்பான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்தப் போர் இப்படியே நீடித்தால் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது. புவியியல் மற்றும் பிராந்திய நலன்களுக்காக அந்தந்த நாடுகள் போர் மண்டலத்திற்குள் நுழைய வாய்ப்பு உள்ளது என்றார்.
மேலும் பல நாடுகள் போரில் இணைந்தால், அது உலகப் போரை நோக்கிய படியாக இருக்கும் என்று யுவல் நோவா ஹராரி கணித்துள்ளார். ஏற்கனவே, ரஷ்யா, உக்ரைன் போர் ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக நீடிக்கும் நிலையில், இஸ்ரேல், ஹமாஸ் போர் 11வது நாளை எட்டியுள்ளது.