2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மூத்த மகனுக்கு சீட் கொடுக்கப் போகிறேன் என்று சீமான் கூறியது விவாத பொருளாக மாறியது. ஆனால் உண்மையில் சீமான் தன்னுடைய மகனை அவ்வாறு சொல்லவில்லை. நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹீமாயூன் கபீருக்கு பதில் அவரின் மூத்த மகனை தேர்தலில் போட்டியிட வைப்பதாக கூறினார். ஆனால் அவரின் பேச்சை சிலர் திரித்து செய்தியாக வெளியிடுவதாக மாநில ஒருங்கிணைப்பாளர் மணி செந்தில் விளக்கமளித்துள்ளார்.