இன்றைய காலகட்டத்தில் வங்கிகளில் தங்களுடைய சேமிப்பை தொடர நினைக்கும் வாடிக்கையாளர்கள் பலரும் அதிக வட்டி உள்ள திட்டங்களை தான் விரும்புகின்றனர். அதன்படி ஃபின்கேர் ஸ்மால் பைனான்ஸ் வங்கி இரண்டு கோடிக்கும் குறைவான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை திருத்தம் செய்துள்ளது. அதாவது மூத்த குடிமக்களுக்கான ஆயிரம் நாட்கள் பிக்சர் டெபாசிட் திட்டத்திற்கு 9.11% வட்டியை வழங்குகிறது.

சாதாரண முதலீட்டாளர்களுக்கு நிலையான வயிற்று தொகைக்கு எட்டு புள்ளி 51% வட்டி வழங்கப்படுகின்றது. இந்த வங்கியில் ஏழு நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பிக்சர் டெபாசிட் வைப்புகளுக்கு மூன்று சதவீதம் முதல் 8.51 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. அதுவே மூத்த குடிமக்களுக்கு 3.60 சதவீதம் முதல் 9.11 சதவீதம் வரை வட்டி கிடைக்கிறது. சாதாரண முதலீட்டாளர்களுக்கு 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு மூன்று சதவீதம் வட்டியும், 15 நாட்கள் முதல் 30 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட்டுக்கு 4.50 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.

மேலும் 31 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 4.75 சதவீதம், 46 முதல் 90 நாட்கள் வரையிலான திட்டத்திற்கு 5.25 சதவீதம் வட்டி , 91 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையிலான திட்டத்திற்கு 5.75 சதவீதம் வட்டி என 750 நாட்கள் முதல் 999 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட்டங்களுக்கு எட்டு சதவீதம் வட்டி என ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திற்கு ஏற்றவாறு வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. எனவே வாடிக்கையாளர்கள் இந்த திட்டங்களில் முதலீடு செய்து பயன்பெறலாம்.