பொதுத்துறை வங்கிகளில் முதன்மையான sbi வங்கி அவ்வப்போது பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டியை மாற்றியமைக்கிறது. அதன்படி மூத்த குடிமக்களுக்கு பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதங்கள் எவ்வளவு வழங்கப்படுகிறது என்பதை இதில் பார்க்கலாம். 7 – 45 நாட்கள் வரை நான்கு சதவீதம், 46 முதல் 179 நாட்கள் கொண்ட திட்டத்திற்கு 5.25 சதவீதம் வட்டி, 180 முதல் 210 நாட்கள் வரை 6.25 சதவீதம் வட்டி, 211 முதல் ஒரு வருடம் வரை 6.5%, 1 முதல் 2 ஆண்டுகள் வரை 7.3%, இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை 7.5 சதவீதம், ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகின்றது.