அண்மையில் ஓய்வு பெற்று உங்களுக்கு நல்ல அளவு நிதி கிடைத்து இருந்தால் SBI-ன் மூத்தகுடிமக்கள் FD திட்டத்தில் முதலீடு செய்வது நீண்டகாலக் கண்ணோட்டத்தில் சிறந்த தேர்வாகும். மூத்தக்குடிமக்கள் SBI-ன் FD திட்டத்தில் 7 தினங்கள் முதல் 10 வருடங்கள் வரையிலான முதிர்வுக்காக முதலீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

பொதுவாக மூத்தக்குடிமக்களுக்கு வழக்கமான வாடிக்கையாளர்களை விடவும் நிலையான வைப்புத்தொகைக்கு அரை சதவீதம் (0.50%) அதிக வட்டி கிடைக்கும். அதே நேரம் மூத்தக்குடிமக்கள் 5 வருடங்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD-களுக்கு 1% கூடுதல் வட்டியை பெறுகிறார்கள். வழக்கமான வாடிக்கையாளர்கள் 5 வருடங்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்களுக்கு 6.5% வருடாந்திர வட்டியை பெறுகின்றனர். அதே சமயத்தில் வங்கி மூத்தக்குடிமக்களுக்கு 7.5% வருடாந்திர வட்டியை வழங்குகிறது.

உண்மையில் மூத்தக்குடிமக்கள் 5 முதல் 10 வருடங்கள் வரையிலான FD-களில் எஸ்பிஐ வீ-கேர் டெபாசிட் திட்டத்தின் கீழ் கூடுதலாக அரை சதவீத பிரீமியம் வட்டியை பெறுகின்றனர். SBI-ன் 10 வருட முதிர்வு திட்டத்தில் ஒரு மூத்தக்குடிமகன் 10 லட்சத்தை மொத்தமாக டெபாசிட் செய்கிறார் எனில், எஸ்பிஐ FD கால்குலேட்டரின் படி முதலீட்டாளர் வருடத்திற்கு 7.5% வட்டி விகிதத்தில் முதிர்வு காலத்தில் மொத்தம் ரூ.21 லட்சத்து 2 ஆயிரத்து 349 பெறுவார். இதில் வட்டி வாயிலாக ரூ.11 லட்சத்து 2 ஆயிரத்து 349 நிலையான வருமானம் கிடைக்கும்.