தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் ஆளும் திமுக அரசுக்கு இடையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதல்வரின் அதிகாரத்தில் தலையிடும் விதமாக ஆளுநர் தெரிவித்த கருத்துகள் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ரவியை பதவியிலிருந்து நீக்கக்கோரி மதிமுக சார்பாக கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என அறிவித்தார்.

இதை சென்னையில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத்தலைவர் நல்லக்கண்ணு துவங்கி வைக்க, பெரம்பலூரில் திமுக துணைப் பொது செயலாளர் ஆ.ராசா கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். அப்போது ஆ.ராசா பேசியதாவது, அரசியல் சட்ட பாதுகாப்போடு ஒரு முட்டாள் மற்றும் மூடத்தனமான மனிதர் இங்கே வந்து கவர்னராக உள்ளார் என ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாக விமர்சித்தார்.