மதுரை மாவட்டத்திலுள்ள சிவரைக்கோட்டை பகுதியில் மு.க அழகிரிக்கு சொந்தமான ஒரு பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிக்கு அருகே கோவிலுக்கு சொந்தமான 44 சென்ட் இடம் உள்ளது. இதனை அபகரித்ததாக கூறி மு.க அழகிரி உள்ளிட்டோர் மீது மதுரை மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் முக அழகிரி உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட நீதிமன்றத்தில் முக அழகிரி மனுதாக்கல் செய்த நிலையில் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்த வழக்கில் இருந்து மட்டும் விடுவித்தது.

இந்த உத்தரவு கடந்த 2021 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இதனை எதிர்த்து மதுரை நில அபகரிப்பு தடுப்பு காவல்துறையினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதேபோன்று இந்த வழக்கிலிருந்து தன்னை முழுமையாக விடுதலை செய்ய வேண்டும் என்று மு.க அழகிரியும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த இரு மனுக்கள் தொடர்பான விசாரணையும் நேத்து ஹைகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசாரின் மனுவை ஏற்ற நீதிபதிகள் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்த வழக்கிலிருந்து மு.க அழகிரியை விடுவித்ததை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும் முக அழகிரி வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்