
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இஸ்லாமிய மக்கள் வாக்களிக்க சென்ற போது அவர்களை ஓட்டு போட விடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாக அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு தெரிவித்தார். அதோட இந்த தொடர்பான வீடியோ ஆதாரத்தையும் அவர் தன்னுடைய x பக்கத்தில் வெளியிட்டார். அதாவது காவல்துறையினர் முஸ்லிம் பெண்களிடம் புர்காவை கழற்றுமாறு கூறியுள்ளனர்.
அதன் பிறகு இஸ்லாமிய ஆண் வாக்காளர்களிடம் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என தேவையில்லாத விஷயங்கள் பற்றி நிறைய கேள்விகள் கேட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. மேலும் இதனால் தேர்தல் ஆணையம் முஸ்லிம் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அந்த உத்தரவின் பெயரில் 7 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
अगर निर्वाचन आयोग का कोई जीता-जागता अस्तित्व है तो वो जीवंत होकर, प्रशासन के द्वारा वोटिंग को हतोत्साहित करने के लिए तुरंत सुनिश्चित करे:
– लोगों की आईडी पुलिस चेक न करे।
– रास्ते बंद न किये जाएं।
– वोटर्स के आईडी ज़ब्त न किये जाएं।
– असली आईडी को नक़ली आईडी बताकर जेल… pic.twitter.com/4Qddtlgc19— Akhilesh Yadav (@yadavakhilesh) November 20, 2024