
ஆந்திரா மாநிலம் சீதாராமன் ராஜு மாவட்டம் தொம்பிரிகுடா மலை கிராமத்தில் அடாரி தொம்புருவின்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது குடும்பம் மட்டும் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்தது. இந்த நிலையில் மற்ற குடும்பங்கள் முன்னேறாத வகையில் செய்வினை வைத்து விட்டதாக கிராம மக்கள் நினைத்தனர்.
இதனால் கோபத்தில் கிராம மக்கள் அனைவரும் இணைந்து அடாரி தொம்புருவினை சரமாரியாக தாக்கி பெட்ரோல் ஊற்றி எரிந்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.