புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதற்கு பிறகு பல அறிவிப்புகள் வெளியாகி வருகின்றது. அதன்படி தற்போது முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு பல திட்டங்களை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. அதாவது புதுச்சேரி முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை இயக்குனர் சந்திரகுமாரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். 2022-23 ஆம் கல்வி உதவித் தொகைக்காக முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் விதவைகள் தங்கள் குழந்தைகளின் விவரங்களை விண்ணப்பிக்க முப்படை நலத்துறை மூலம் ஜூன் 5ஆம் தேதி முதல் ஜூலை 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இந்த உதவித்தொகை பெற தகுதியுள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் தங்களின் அடையாள அட்டையுடன் அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். மேலும் முப்படை நலத்துறையின் இணையதளம் https://sainik.py.gov.in மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.