ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அவர் கைதாகிக் கொஞ்சக் காலம் சிறையில் கூட இருந்திருந்தார். இந்த வழக்கில் அவர் ஜாமீன் கோரியிருந்த நிலையில் பல கட்டுப்பாடுகளுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்நிலையில்  ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தொடுத்த  வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய மேலும் ஆறு மாதங்கள் தடை விதித்து உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. மேலும் ராஜேந்திர பாலாஜி வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் எனவும் கட்டுப்பாடு விதித்துள்ளது.