முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4,200 எம்டி மற்றும் எம்எஸ் என்ற முதல் நிலை மருத்துவ படிப்புகள் உள்ளன. அதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 சதவீத இடங்கள் போக மீதம் உள்ள இடங்கள் மாநில ஒதுக்கீட்டில் நிரப்பப்பட உள்ளது.

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் ஜூலை 13ஆம் தேதி மாலை 5 மணி வரை https://www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் கிராமப்புற மற்றும் மலை பிரதேசங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு முதல்நிலை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கையில் ஊக்க மதிப்பெண் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.