
தமிழகத்தில், வருவாய்த் துறை சார்பாக சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் முதியோர், விதவை, முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் ஆட்சிக்காலத்தில் வருவாய்த் துறை மேற்கொண்ட பணிகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், முதியோருக்கான மாதாந்திர உதவித் தொகை ரூ.1,000இலிருந்து ரூ1,200ஆக உயர்த்தி 34.90 லட்சம் பேருக்கு தற்போது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மேலும், கூடுதலாக 80,000 முதியவர்களுக்கு விரைவில் உதவித் தொகை அளிக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.